தேன் திரைப்படத்தின் விமர்சனம்
தேன் - கணேஷ் விநாயக்
சமீபத்தில் வெளியான தேன் திரைப்படத்தின் என்னுடைய கருத்தை இங்கு பதிவிட்டுளேன் உங்களுடைய கருத்தையும் கீழே பதிவிடுங்கள் .
மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை இப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. குறிஞ்சிக்குடி என்னும் மலை கிராமத்தில் வாழ்பவர்கள் வேலு என்கிற தருண் குமார் மற்றும் பூங்குடி என்கிற அபர்ணதி. பூங்குடியின் தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் குறிஞ்சித்தேன் தேவைப்படுகிறது, வேலு குறுஞ்சிதேனை கொண்டு வந்து கொடுக்கிறான், இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது அது காதலாக மாறுகிறது. ஊர் மக்கள் முன்னிலையில் கடவுளிடம் அனுமதி கேட்கப்படுகிறது , அனுமதி கிடைக்காததால் ஊர் மக்கள் இவர்கள் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அதையும் மீறி பூங்குடியும் வேலுவும் திருமணம் செய்து கொள்கிறார்கள் பின் ஒரு குழந்தையும் பிறக்கிறது .
சில நாட்களுக்கு பின் பூங்குடிக்கு தீராத வயிற்று வலி ஏற்படுகிறது அதனால் வைத்தியம் பார்க்க கீழே நகர்புரத்திற்கு செல்கிறார்கள். அங்கு அவன் வைத்தியம் பார்க்க அரசின் அடையாள அட்டை தேவைப்படுகிறது. அதை பெறுவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறான் , சிரமப்பட்டாவது பூங்குடியை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் மீதி கதை .
ஆதார் அட்டை போன்ற அரசு அடையாள அட்டையை பெற அவன் படும் பாட்டையும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தையும் கணேஷ் விநாயக் கூறியுள்ளது அனைவரையும் கண் கலங்க வைக்கிறது . என்னை பொறுத்த வரை இது கதை இல்ல அன்றாட வாழ்வில் ஒரு சாமானிய மனிதனுக்கு ஏற்படும் சமூக அநீதி ஆகும். மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை வெளிச்சம் போட்டு காட்டிய கணேஷ் விநாயக் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த திரைப்படத்தின் உணர்ச்சி முகட்டில் (Climax ) இடம்பெறும் சனத் பரத்வாஜ்- ன் இசை கண் கலங்க வைக்கிறது. பல விருதுகளை பெற்ற இந்த திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ஆகும்.
(இந்த விமர்சனத்தை பற்றிய உங்களுடைய கருத்தை கீழே பதிவிடுங்கள்.)
நன்றி !
இப்படிக்கு,
க கிஷோர் .
The way of your explanation me also eager to see😇😇so definitely I see the movie✨✨
ReplyDeletethank you
Delete