நாம் இன்று சுதந்திரமாக
இருக்கிறோமா? நம் நாடு சுதந்திரமாக
இருக்கிறதா? என்றால், நான்
இல்லை என்றுதான் சொல்லுவான். ஆம் என்று சொன்னால் அதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். ஏனெனில் நாம் பயன்படுத்தும் ‘கைபேசி” முதல்
அதிநவீன ‘புல்லட் டிரெயின்” வரை அனைத்திற்கும் நாம் பிற நாடுகளை நம்பித்தான்
இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். உதாரணத்திற்கு, நாம் அமர்ந்திருக்கும் அறையை எடுத்துக்கொள்வோம் இங்கு உள்ள மின்விசிறி, விளக்குகள் அனைத்தும் இயங்க ‘மின்சாரம்” இன்றியமையாதது ஆகும் .
அந்த மின்சாரத்தை நாம் 100% சதவிகிதம் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோமா என்றால் "இல்லை".
நம் நாட்டின் 70 சதவிகித மின்சாரத்தேவை அனல்மின் நிலயத்தினாலேயே பூர்த்திசெய்யப்படுகிறது. அந்த அனல்மின் நிலயத்திற்குத்தேவையான 90 சதவிகித நிலக்கரி பிற நாடுகளிடம் இருந்தே நமக்கு இறக்குமதியாகிறது . இந்த நிலை மாற வேண்டும் . நாம் நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியைவிட மேலோங்கி இருக்க வேண்டும் . இதற்கு இளைஞர்களாகிய நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்டால், அதற்கு பதில் கல்வி. கல்வியைவிட சிறந்த ஆயுதம் வேறொன்றும் இல்லை.
‘கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்கிறது மூதுரை. ஆம் கல்வியின் முக்கியத்துவத்தை அன்றே நம் முன்னோர்களும் அறிந்து இருந்தார்கள். நாம் அனைவரும் கல்வி கற்று, திறமையை வளர்த்துக்கொண்டு சுயமாக, சொந்த காலில் நிற்க வேண்டும். கல்வி,பொருளாதாரம்,வணிகம் என அனைத்துத் துறைகளிலும் நம் நாடு சுயமாக, சுதந்திரமாக செயல்படவேண்டும் என்ற நோக்கில் நம் பிரதமர் "ஆத்ம நிர்பார் பாரத்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். என்று இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருக்கிறதோ,
‘அன்று முடியும் இந்த அடிமையின் மோகம்!!
அன்று முடியும் இந்த அடிமையின் மோகம்!! ”.
‘விடியாத இரவென்று எதுவுமேயில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமே இல்லை
முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை”
எனவே நாம் அனைவரும் முயற்சி செய்து நம் நாட்டை உலக அளவில் சுயமாக, சுதந்திரமாக செயல்பட வைப்போம் என்று உறுதி அளிப்போம்.
இப்படிக்கு,
உங்கள் நண்பன்,
க. கிஷோர் .
