முதியவரின் நேர்மை


 அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே !

      

முதியவரின் நேர்மை  

            நான் தான் உங்கள் கிஷோர். நான் இந்த வாரம் என்னுடைய வாழ்க்கையில் கண்ட என் மனதை தொட்ட நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாம் அனைவருமே பேருந்தில் பயணம் செய்து இருப்போம். பேருந்தில் பயணம் செய்தால் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நம் பள்ளிப் பருவங்களில், நம் கல்லூரி பருவங்களில் நாம் என்ன செய்திருப்போம் சில சமயம் நடத்துனரை ஏமாற்றிவிட்டு பயணச்சீட்டு எடுக்காமல் கூட பயணம் செய்து இருப்போம். ஆனால், அப்போது அது நமக்கு விளையாட்டாக தெரிந்திருக்கும், ஆனால் உண்மையில் நமக்குத் தெரியும் இவ்வாறு நடத்துனரை ஏமாற்றுவது தவறு என்று சரி, அதை நாம் விளையாட்டிற்கு செய்துவிட்டோம் என்று எடுத்துக்கொள்வோம். ஆனால், சிலர் தற்போதும் முப்பது, நாற்பது வயதுகளில் கூட பயணச்சீட்டு எடுக்காமல் ஏமாற்றி பயணம் செய்பவர்கள் இருக்கும் இந்த காலத்தில் நான் ஒரு பெரியவரைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனேன்  

        இந்த வாரம் நான் ஒரு நாள் பேருந்தில் பயணிக்கும் பொழுது ஒரு அறுபது வயது பெரியவர் பேருந்தில் ஏறி அமர்கிறார் அவர் இறங்கவேண்டிய இடம்  அடுத்த நிறுத்தமாக (BUS STOP) இருப்பதால் பயணச்சீட்டு எடுப்பதற்காக நடத்துனரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நடத்துனர் ஒவ்வொருவரிடமும் பயணச்சீட்டு கொடுத்து விட்டு வருவதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடுகிறது. பேருந்து நின்று விடுகிறது. அவர் பேருந்திலிருந்து கீழே இறங்க முற்படுகிறார். ஆனால், இன்னும் நடத்துனர் வரவில்லை. அவர் நடத்துனரை அழைக்கிறார், நடத்துனர் என்னவென்று கேட்க வருகிறார்.

முதியவர் :  ஐயா, நான் இன்னும் பேருந்து பயணச்சீட்டு எடுக்க வில்லை எனவே இந்த இடத்திற்கான பயணச்சீட்டை கொடுங்கள் என்று ரூபாய் நோட்டை நீட்டுகிறார்.

நடத்துனர் :  பரவாயில்லை, ஐயா நீங்கள் இறங்குங்கள் என்று கூறுகிறார். ஆனால், அந்த முதியவரோ இல்லை இல்லை வேண்டாம், நீங்கள் எனக்கு பயணச்சீட்டு கொடுங்கள் என்று அவர் படியை விட்டு இறங்கிய பிறகும் அதற்கான ரூபாயை கொடுத்து பயணச் சீட்டு வாங்கிய பிறகுதான் அந்த பேருந்தில் இருந்து கையை எடுத்து புறப்பட்டார்.

எப்பொழுது, யாரை ஏமாற்றி எப்படி சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மனிதரா என்று நான் ஆச்சரியப்பட்டு போனேன்.

நல்ல தூய்மையான எண்ணமும், மனமும் கொண்ட மனிதர்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய உதாரணம்.

 இந்த நிகழ்வு உங்களுக்கு எப்படி தோன்றுகிறது, இது என் மனதைத் தொட்டதால் தான் நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். உங்களுடைய கருத்துக்களையும் கீழே பதிவிடுங்கள் உங்களுடைய கருத்துக்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 

 

இப்படிக்கு,

                                 உங்கள் நண்பன்,

      க  கிஷோர்

 

                               

                                                                                                                                                                   

 

 

                                                                                                                                                          

                                                                                                                                                            

Kishore Ganeshan

I am Kishore. I love to help others. Be happy friends. I will share my opinions about life in this blog.

10 Comments

Previous Post Next Post

Popular Items